சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக, திக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வருவதாக கூறப்படும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் தினகரன் ஆகிய இரண்டு இருவரும் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாஜகவுடன் நெருக்கமாகி வருவதாக டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறில்லை என்று சொன்னதில் இருந்தே டிடிவி தினகரன் பாஜகவை நெருங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளில் தீவிரமாக இருந்து வரும் டிடிவிதினகரன் ரஜினியை இன்னும் விமர்சனம் செய்யாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வரும் பொதுத்தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைக்க டிடிவிதினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் விமர்சனம் செய்யாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் தான் கமலஹாசன் அமைதியாக இருப்பதாக தெரிகிறது மொத்தத்தில் ரஜினி – பெரியார் விவகாரம் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி விடும் போல் தெரிகிறது.