தொடரும் அன்புத் தொல்லைகள்… சமூகவலைதளங்களில் இருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா?

Photo of author

By Vinoth

தொடரும் அன்புத் தொல்லைகள்… சமூகவலைதளங்களில் இருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தமிழ் திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது திரைப்படம் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸட்ர் ஹிட்டானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு படமும் செய்யாத வசூலை விக்ரம் வசூல் செய்தது. இதையடுத்து லோகேஷ் அடுத்து விஜய்யுடன் இணையும் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 170 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியை அவர் இதுவரை ருசித்தது இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டதாகக் கூறியிருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுபற்றி “அடுத்த படத்தின் அப்டேட்டுடன் மீண்டும் வருகிறேன்” என்றும் அறிவித்துள்ளார்.

ஆனால் லோகேஷ் வெளியேறியதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அடிக்கடி யாராவது படத்தின் முதல் லுக், டீசர் மற்றும் ப்ரமோஷன் போன்றவற்றை வெளியிட சொல்லி அன்புத்தொல்லை தருவதால், அதை தவிர்க்கதான் லோகேஷ் இந்த முடிவை எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.