ஏன் நானே வருவேன் படத்துக்கு அதிகாலை காட்சிகள் இல்லை… தயாரிப்பாளர் பதில்!
தனுஷ் நடிப்பில் இன்று நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்துக்காக பெரியளவில் ப்ரமோஷன்கள் செய்யப்படவில்லை.
பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படம் ரிலீஸாகும் நேரத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் ரிலீஸாகிறது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என சொல்லபப்டுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர் தாணு துணிந்து இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும், ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே கவரும் என்பதால் இப்போது ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் ஆச்சர்யப்படும் வகையில் படத்துக்காக படக்குழுவினர் எந்தவொரு ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள அதிகாலை காட்சிகள் எதுவும் இல்லாமல் வழக்கமான நேரத்தில்தான் காட்சிகள் திரையிடப்படுகின்றன. சமீபத்தில் ரிலீஸான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கூட இப்படிதான் சிறப்புக் காட்சிகள் இல்லாமல் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படாததின் காரணத்தை தற்போது தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். அதில் “அதிகாலைக் காட்சிகளைப் பார்க்க பலரும் இரு சக்கரவாகனங்களில் அதிகாலை நேரத்தில் இருட்டில் வருகிறார்கள். அப்போது விபத்து போன்ற தேவையிலலாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்கவே இந்த முடிவு. என் படங்கள் அனைத்துக்கும் இனிமேல் அதிகாலை காட்சிகள் இருக்காது” எனக் கூறியுள்ளார்.