மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்!

Photo of author

By Savitha

மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்து இடாததற்கு பல காரணங்கள் இருப்பதாக, சங்க நிர்வாகி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகி ஜெய்சங்கர், மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், அது குறித்து எந்த முடிவும் எடுக்காததால் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் , அதேபோன்று கேங்மேன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று அறிவித்த தான் காரணமாகவும் தங்களது அமைப்பு கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே போன்று தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியான ஊழியர்கள் நிரந்தரம் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படாததாலும், ஆட்குறைப்பு செய்வோம் என்ற மின்வாரியத்தின் கொள்கையில் தங்களது அமைப்பிற்கு உடன்பாடு கிடையாது என்பதாலும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்தார்.