3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி?
பிற சமூகம் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற வேண்டுமா? இன்னும் இந்த நிலை எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டுமென தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் தமிழக அரசு சார்பில் சமூகநீதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக தகவல் தொழிநுட்ப பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பிராமணர்கள் குலத்தொழிலை பின்பற்றாதபோது பிற சமூகத்தினர் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், குலத்தொழிலான அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு சட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு பிராமணர்கள் சென்றனர் என்றும் குறிப்பிட்டார்.
சமூகத்தில் 3% உள்ள சாதியினர் எப்படி அனைத்து அரசுப்பணிகளிலும் பெரும்பான்மையில் உள்ளனர்? பிராமணர்கள் மட்டும் படித்திருந்ததால் அவர்களே அர்ச்சகர்களாக கருவறைக்குள் இருந்தார்கள்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தற்போது திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். திமுக அரசு வழங்கியுள்ள மகளிர் உரிமைத் தொகையால், ஒரு கோடிக்கும் அதிகமான இல்லத்தரிசிகள் பயனடைவார்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழக நிதித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இரண்டு முறை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்கள் இரண்டும் பலராலும் பாராட்டப்பட்டது. அவரை சிறந்த மற்றும் நல்ல அமைச்சர் என்று மக்கள் பாராட்டி வந்தனர். அந்நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியலில் இருந்து மாற்றப்பட்ட பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக படவில்லை தியாகராஜன் அவர்கள் மாற்றப்பட்டார். அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் அவர்கள் குறித்து பேசிய ஆடியோ தான் இதற்கெல்லாம் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் தற்போது வரை பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.