மத்திய அமைச்சரின் மகனை இன்றுவரை கைது செய்யாதது ஏன்? மறைத்து வைத்து கண்ணாமூச்சி ஆடும் பாஜக!

Photo of author

By Rupa

மத்திய அமைச்சரின் மகனை இன்றுவரை கைது செய்யாதது ஏன்? மறைத்து வைத்து கண்ணாமூச்சி ஆடும் பாஜக!

விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில வாரம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றுள்ளனர். கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் மாநில துணை முதல்வர் மந்திரி கேசவ பிரசாத் மவுரியா வருவதாக கூறியிருந்தனர். இவர் வருவதை எதிர்த்து அவரை தடுக்கும் விதமாக அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் திகுணியாவில் குவிந்தனர்.

அப்பொழுது அந்த கிராமத்தில் அவ்வழியே பாஜகவினரின் வாகனங்கள் அணிகளாக வந்தது. அவர் வந்த ஒரு கார் அங்குள்ள விவசாயிகள் மீது மோதியது. அதில் இரு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜக வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் வன்முறையாக காட்சி அளித்தது. வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு ஒன்றிய அரசின் அராஜகத்தால் உயிர்களை இழந்த விவசாயிகளை கண்டு உத்தர பிரதேச மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.அதனையடுத்து வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை காண பிரியங்கா காந்தி சென்றார். அப்போது அவரை ஊருக்குள் நுழைய விடாமல்  அந்த இடத்திலயே  கைது செய்தனர். அதன் பின் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த கிராமத்திற்கு சென்று இருந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உத்தரவு வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து அந்த கார் விவசாயிகள் மீது மோதிய வீடியோ தற்பொழுது வெளியானது. மேலும் ஒன்றிய அமைச்சரின் மகன் மற்றும் ஆதரவாளர்கள் இரண்டு பேர் மீது தற்போது கைது நடவடிக்கை போடப்பட்டுள்ளது.அவற்றில் மத்திய இணை அமைச்சரின் மகனின் ஆதரவாளர்கள் இருவரை கைது செய்துள்ளனர். விவசாயிகள் உயிரிழந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்த இருவரை போலீசார் கைது கைது செய்தனர்.மேலும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிக் மிஸ்ரா  மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால்,ஆஷிக் மிஸ்ரா  மத்திய இணை அமைச்சரின் மகனாக இருப்பதால் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மேலும் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை தேடி வருவதாக கூறியுள்ளனர்.அவரை விரைவில் கைது செய்யுமாறு லக்கிம்பூரில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.காரை ஏற்றி விவசாயிகளை கொன்ற  சம்பவத்தில் மேலும் மூன்று பேரிடம் காவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணை முடிவில் அவர்களும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.