அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? பிரபல நடிகர் பதில்!

Photo of author

By Vinoth

அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? பிரபல நடிகர் பதில்!

அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸாக உள்ளது.

பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது இயல்பான நடிப்பினால் உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கொரோனா லாக்டவுன் காரணமாக சில ஆண்டுகள் தடைபட்டது. அதனால் மற்ற படங்களில் நடிப்பது பாதிக்கப்படுவதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அவர் நடித்த கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இப்போது நாக சைதன்யா படத்தில் இருந்து விஜய் சேதுபதி ஏன் விலகினார் என்று நாக சைதன்யா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘அவர் நிறைய படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அதனால் தயாரிப்பாளரிடம் பேசி விலகினார்.’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஒருவேளை விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருந்தால் அவர் நடித்த முதல் பாலிவுட் படமாக அமைந்திருக்கும்.