வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்!

Photo of author

By Rupa

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்!

தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் கழித்து தற்போத் தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது.ஆட்சி அமர்த்திய முதல் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.இருப்பினும் ஓர் திட்டம் மூலம் விலைகளை குறைத்தால் மறைமுகமாக  அடுத்த ஏதோ ஒன்றில் விலையை உயர்த்திவிடுகின்றனர்.இவ்வாறு இவர்கள் செய்யும் திட்டத்தை பற்றி சுற்றுவட்டாரங்கள் பேசி வருகிறது.அந்தவகையில் தற்போது 9 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் தற்போது நடைபெறுகிறது.

இந்த தேர்தலானது இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,சென்ற முறை (2006) திமுக ஆட்சி நடைபெற்ற போது ஊராக ஊலாட்சி தேர்தல் நடைபெற்றது.அப்போது திமுக வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பல முறைகேடுகள் நடந்தது.அதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மற்றும் இதர தரப்பினர் வழக்கு தொடுத்தனர்.வழக்கு தொடுத்ததையடுத்து நீதிமன்றம் மீண்டும் மறுதேர்தல் நடைபெறும் என கூறியது.இவ்வாறு சென்ற முறை அவர்கள் இருந்த போதே பல ஊழல்கள் நடந்துள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் எந்த ஒரு ஊழலுக்கும் தேர்தல் ஆணையம் துணை போகாது என்றும் தெரிவித்தார்.அதேபோல ஜனநாயக முறைப்படி ஊராக உள்ளாட்சி தேர்தல் தற்போது  நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.தேர்தலானது முறைப்படி நடக்கும் என்பது குறித்து நீதிமன்றத்தில் , அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கப்பட்டு விட்டது என்று  கூறினார்.அதேபோல பல வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தாது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரவித்தார்.