WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன?

0
131
WI vs IND: Team India's Intended XI for 4th T20I! What are the changes?
WI vs IND: Team India's Intended XI for 4th T20I! What are the changes?

WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 4 வது போட்டி வரும் 6 ஆம் தேதியும், கடைசி டி20 போட்டியானது வரும் 7 ஆம் தேதியும் நடக்கவுள்ளது. ஃப்ளோரிடாவில் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ள  4 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த 4 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.

அந்த வகையில் 4 வது டி20 போட்டிக்கான  இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 3 வது போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். தற்போது கேப்டன் ரோஹித் சர்மா அந்த காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை அடைந்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனால் இந்திய அணி காம்பினேஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும். இந்த 4 வது டி20 போட்டியிலும் தீபக் ஹூடா ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

Previous articleமேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை! காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு என்ன?
Next articleசொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை