காற்றில் பரந்த விதிமுறைகள்! தொடர்ந்து அரங்கேறும் கொரோனா தொற்று!
சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று,தற்போது கொரோனாவின் 2வது அலையாக உருமாறி மக்களை அதிகளவு தாக்கி வருகிறது.பிரதமர் மார்ச் 8-ம் தேதி அதிகம் தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.
அந்த ஆலோசனையின் முடிவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.அந்தவககையில் தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளை நிறுவினர்.மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், திருவிழாக்கள்,மாதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி மறுத்தனர்.
அதுமட்டுமின்றி சென்னையில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் கூடுதல் செயல்பாடுகளை அமல்படுத்தினர்.பொது மனித இடைவெளி மற்றும் சாலைகளில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் போடப்படும் என கூறினர்.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை நிறுவியும் மக்கள் அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தங்களின் வேலிகளை ஆர்த்து செல்கின்றனர்.
இவ்வாறு அபராதம் விதித்து இரு நாட்களிலே 2.52 கோடியாக உள்ளது.இவ்வாறு பல நடவடிக்கைகள் கடைபிடித்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மக்கள் சிறிதளவும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடமாடிக்கொண்டிருந்தனர்.அதில் பலர் முகக்கவசம் அணியாமலும்,தனிமனித இடைவெளி கடைபிடிக்காமலும் கூட்டம் கூட்டமாக சென்றுக்கொண்டிருந்தனர்.இவ்வாறு மக்கள் கொரோனா தொற்றை அலட்சியமாக நினைத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் அதிக படியான மக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.