மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!

Sakthi

சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கீர்த்தி ராஜ் மற்றும் தனஸ்ரீ தம்பதியினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த சூழ்நிலையில், கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது.

கணவரின் கொடுமை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மனைவியை சமாதானம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் கீர்த்தி ராஜ்.

அன்று இரவே தங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக தனஸ்ரீ பெற்றோருக்கு தகவல் கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் பெற்றோர்கள் உடனடியாக புறப்பட்டு கீர்த்தி ராஜ் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள்.

அப்போது மகளின் உடலில் காயங்கள் இருந்திருக்கிறது, அதோடு வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்ததை கண்டிருக்கிறார்கள். இதன்காரணமாக, சந்தேகமடைந்த தனஸ்ரீயின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த புகாரில் திருமணமான சில மாதங்களில் ஆடி கார் கேட்டு மகளை அவருடைய கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்கள், அதோடு அந்த கொடுமையான வாழ்க்கை வேண்டாம் என தெரிவித்து தான் தங்களுடைய மகள் எங்களுடன் வசித்து வந்தார் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் தங்களுடைய மகளை சமாதானம் செய்து அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து அவருடைய கணவர் கொலை செய்திருக்கிறார் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் இந்த தம்பதிகளின் 3வது ஆண்டு திருமண நாளில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.