குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?

Photo of author

By Parthipan K

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா என்ற பகுதியில் 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.இவர் இருதய நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியாரை மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி மருத்துவமனையில் இருந்ததால் வந்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து மனைவிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கணவர் தனது குழந்தைகளுடன் சேர்த்து மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.தனது தாயாரை மருத்துவமனையில் இருந்து பார்த்து கொண்டதால் தான் மனைவிக்கு கொரோனா வந்தது என்று தெரிந்தும் அவர் இந்த செயலை செய்துள்ளார்.

மேலும் மனைவி வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறியும் அவர் வலுக்கட்டாயமாக வெளியே துரத்தி விட்டார்.இந்த சம்பவமானது கடந்த மே மாதம் நடந்துள்ளது.அதன் பிறகு அந்த பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் அந்த பெண்ணின் கணவன் திடீரென அவரை சந்தித்து அவரை விவாகரத்து செய்ய போவதாக கூறி மிரட்டியுள்ளார்.அதனை அடுத்து அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் கணவன் குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்களை அன்புடனும்,ஆதரவுடனும் நடத்த வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில்,கொரோனா அறிகுறி இருந்ததால் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.