கணவனுக்கு சரக்கு ஊற்றி போதையேற்றிய மனைவி:பின்னர் கள்ளக்காதலன் செய்த செயல்?

0
182

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் தேவராஜ் மற்றும் புஷ்பா. இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள மிளகுத் தோட்டத்தில் தங்கள் இரு குழந்தைகளுடன் தங்கி வேலை செய்துள்ளனர். அங்கு புஷ்பாவிற்கு மணி என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இப்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் தம்பதிகள் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு திரும்பி வசித்து வரும் நிலையில், புஷ்பா தனது கள்ளகாதலானான மணியுடன் தனது கணவருக்குத் தெரியாமல் தொலைபேசில் பேசிவந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் புஷ்பாவின் கணவருக்கு தெரியவரவே அவர் புஷ்பாவை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மனைவி தன் கணவனைக் கொலை செய்ய தன் கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அடுத்தக்காட்டமாக கடந்த ஆறாம் தேதி இரவு புஷ்பா தனது கணவருக்கு அளவுக்கு அதிகமான மதுவை ஊற்றி குடுத்து குடிக்க வைத்துள்ளார்.அவர் போதையில் சுயநினைவை இழந்த பின்பு தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து கள்ளக்காதலனுக்கு துணையாக வந்த இன்னொரு நபரும், இவரும் புஷ்பாவின் கணவரின் பாடியை வண்டியில் வைத்து கல்வராயன்மலை பகுதியில் வீசி சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த, 7-ம் தேதி கல்வராயன்மலை வனப்பகுதியில் தேவராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி அவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலன் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகூகுள் மேப்பில் இருந்து காணாமல் போன நாடு ?
Next articleமின்வாரிய ஊழியர்களை கட்டி வைத்த கிராம மக்கள்! ஊரடங்கில் நடந்த பரபரப்பு சம்பவம்!