கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது!!

Photo of author

By Sakthi

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது!!

Sakthi

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது…
கணவனை செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்  கூத்தியார்குண்டு என்ற பகுதியில் காளிதாஸ்-ஜெயா என்ற தம்பதி வசித்து வந்தனர். காளிதாஸ்-ஜெயா தம்பதிக்கு 14 வயதிலும், 12 வயதிலும், 10 வயதிலும் என மூன்று குழந்தைகள் உள்ளனர். காளிதாஸ், ஜெயா இருவரும் கப்பலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
குடிக்கு அடிமையான காளிதாஸ் தினமும் குடித்துவிட்டு ஜெயா அவர்களுடன் தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளார். இதே போல கடந்த வியாழக்கிழமையும்(ஆகஸ்ட்3) காளிதாஸ் அவர்களுக்கும் ஜெயா அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட ஜெயா அருகில் உள்ள வீட்டின் மாடிக்கு சென்று தூங்கினார்.
இதையடுத்து அதிகாலை 4 மணிக்கு காளிதாஸ் மனைவி ஜெயா அவர்கள் வீட்டிற்குள் வந்துள்ளார். வீட்டுக்குள் வந்த ஜெயாவிடம் காளிதாஸ் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ஜெயா அருகில் இருந்த செல்போன் சார்ஜர் ஒயரை எடுத்து கணவன் காளிதாஸ் அவர்களின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அருகில் ஆருந்தவர்களிடம் மனைவி ஜெயா “கணவர் காளிதாஸ் தூக்குப் போட்டு இறந்துவிட்டார்” என்று நாடகமாடினார். சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் மனைவி ஜெயாவை விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்படி விசாரணையில் ஜெயா கணவன் காளிதாஸை கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து மனைவி ஜெயாவை காவல் துறையினர் கைது செய்தனர்.