ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!!

0
40
ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!!
ஆடி அமாவசை வருவதையொட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுகிரி சுந்தர மகாலிங்க சுவாமிகள் கோவிலுக்கு  செல்ல பக்தர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிகள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் சுவாமியை தரிசனம் செய்தவற்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதிக்கப்படுவர்.
அதைப் போல வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆடி அமாவசை தினம் இந்த கோவிலில் திருவிழா போல கொண்டாடப்படுவது வழக்கம். சதுரகிரி மலையின் மேல் இருக்கும் கடவுளை சந்திக்கவும் மலையேறவும் ஆடி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகின்றது. இதனால் சதுரகிரி மலை ஏறுவதற்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.
2023ம் ஆண்டுக்கான ஆடி அமாவசை விழா வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆடி அமாவசை திருவிழாவிற்கு சதுரகிரி மலைக்கு பல்லாயிரக் கணக்கான  மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை மலை ஏறுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அனைவரும் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சுவாமி தரிசனம் செய்வதற்கு செல்ல வேண்டும். மிக எளிதில் தீபற்றக் கூடிய பொருட்களையும், தடை செய்யப்பட்ட பொருள்களையும் பக்தர்கள் மலைப் பகுதிக்கு எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுவாமி தரிசனம் செய்து முடித்தவுடன் பக்தர்கள் அனைவரும் கீழே இறங்கி விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.