மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Photo of author

By Sakthi

சென்னை மதுரவாயல் அடுத்து இருக்கின்ற ஆலப்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய குடியிருப்பு பக்கத்தில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் ஒன்றை வைத்து அதில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார்.

இந்த நிலையில், ராஜேந்திரனின் கோவில் அருகே திருமலை என்பவர் வசித்து வருகின்றார். இதன் காரணமாக, ராஜேந்திரனுக்கும் திருமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், திருமலையின் மனைவி சென்ற இரண்டு தினங்களுக்கு முன்னால் கணவருடன் தகராறு செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவரை திருமலை வீட்டிற்கு அழைத்தும் அவருடைய மனைவி வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, அவர் கடுமையான கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் தன்னுடைய மனைவி வீட்டை விட்டு போனதரற்கு சாமியார் ராஜேந்திரன் தான் காரணம் என்று தெரிவித்து கோபப்பட்டு அதன்பிறகு சாமியார் ராஜேந்திரனை தேடிச்சென்ற திருமலை, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி இருக்கின்றார். இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் ராஜேந்திரன்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து திருமலையை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் பெயரில் மதுரவாயில் காவல்துறையினர் அவரை கைது செய்தார்கள்.

இந்த நிலையில் பலத்த காயத்துடன் ராஜேந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .மனைவி சண்டை விட்டு சென்ற பிறகு ராஜேந்திரன் தான் காரணம் என்று தெரிவித்து அவரை கத்தியால் குத்தியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.