திருமணநாளை கொண்டாடுவது குறித்து கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் கங்கா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ,சந்திரா-வுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிய இருக்கிறது. இந்நிலையில் திருமண நாளை சுரேஷ் அவர்களின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என மனைவியிடம் கேட்டுயுள்ளார். ஆனால், பணம் செலவாகும் என்பதால் திருமண நாளை கொண்டாட வேண்டாம் என சந்திர கூறினார். இதனால் கணவன் ,மனைவி இடையே தகராறு அதிகரித்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் மாலை மனைவி சந்திராவுக்கு தொலைபேசியில் அழைத்து உள்ளார்.
ஆனால், சந்திரா செல்போனை எடுக்காததால், தனது தாயை அனுப்பி பார்க்க சொன்னார்.அப்போது சந்திரா வீட்டில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக மாமியார் தனது மகன் சுரேஷிடம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சந்திராவை அருகில், இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சந்திரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அப்பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.