150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

Photo of author

By Kowsalya

 

விக்கிபீடியா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே நாம் எந்த தகவலை தேடினாலும் முதலில் நம் கண்களுக்கு புலப்படுவது விக்கிபீடியாவை ஆகும்.நாம் எந்த தகவலை தேடுகிறோமோ அதனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி நமக்கு அளிக்கிறது விக்கிபீடியா.

உலகம் முழுவதும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது அதில் இந்தியர்களும் அதிகமாக பயன்படுத்துகின்றனர் கடந்த ஆண்டு 77 கோடி இந்தியர்கள் விக்கிபீடியாவின் மூலம் தகவல்களை பெற்றுள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது.

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய இணையதளங்களில் விக்கிபீடியா ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்கிபீடியாவின் இந்த சேவையானது முழுவதும் இலவசமாகவே தரப்படுகிறது அதில் எந்த ஒரு விளம்பரத்தையும் எங்கள் காண முடியாது.

தற்போது விக்கிபீடியாவில் தேடும் பொழுது ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது அது என்னவென்றால் ” இதைக் கூற எங்களுக்கு தர்மசங்கடமாக தான் உள்ளது.

எங்களதுஇந்த இலவச சேவையை நீங்கள் தொடர ஒரு சிறிய அளவிலான நன்கொடையை நீங்கள் தர வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களால் முடிந்தவரை ஒரு சிறிய அளவிலான 150 ரூபாயை நீங்கள் நன்கொடையாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இது எங்களுடைய சேவையை நீட்டித்துக் கொள்ள ஒரு பெரும் உதவியாக இருக்கும் என கருதுகிறோம்”.

இதற்கு முன் 2015ஆம் ஆண்டிலும் இந்த மாதிரியான நிதியை விக்கிபீடியா கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த சிறிய அளவிலான உதவித்தொகை விக்கிபீடியாவில் ஊழியர்களுக்கு பயன்பெறும் வகையிலேயே கேட்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தது.