முறைமாமன் -முறைப்பெண் நெருங்கிய திருமணத்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா? ஆய்வு மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்வதால் குழந்தை பிறக்கும் போது ஊனமாக பிறக்கும்.ஆம் இது உண்மையான விசயம் தான்.இதை பற்றி பார்ப்போம்.
தென் இந்தியாவில் இன்றளவும் முறைமாமன் -முறைப்பெண் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணங்கள் செய்வது வழக்கமாக உள்ளது. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது போன்ற திருமணங்களை காண முடிவதில்லை.
உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளிடம் உடல் குறைபாடு அதிகமாக இருக்கும் நாடுகளில் தமிழ்நாடு இரண்டாம் இடம்.
நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்யும் போது தம்பதிகளிடையே மூதாதையர்களின் மரபணுக்கள் பரிமாற்றப்படுகிறது. இந்த மரபணுக்கள் தான் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் இந்தியாவில் ஆறு முதல் எட்டு லட்சம் குழந்தைகள் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக பிறக்கின்றன. மேலும்,பிறக்கும் குழந்தைகளிடம் மரபணுக் கோளாறால் விளையும் X க்ரோமோசோம் சம்பந்தப்பட்ட ஆட்டோசோமல் ரிசசிவ் வியாதிகள் அதிகமாக தென்படுகின்றன.
தாய்,தந்தை இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக் கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல்,இந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.
இதனால் பிரசவங்களில் கூட அதிக சிசு மரணங்கள் நிகழ்கின்றன என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இந்நிலையிலும் சில வருடங்களுக்கு முன்னர் NON CONSANGUINOUS MARRIAGE.அதாவது சொந்தம் தவிர வெளியே திருமணம் செய்யும் வழக்கமும் நம்மிடையே இருந்து வந்துள்ளது எனவும் தெரிகிறது. இதை நாம் உணரவே இந்த பதிவு.