சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா!

Photo of author

By Rupa

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நான் தீவிரமாக அரசியலில் ஈடுபட போகிறேன்.விரைவில் மக்கள் பிரச்சாரத்தை துவங்க போகிறேன் என்றார்.இவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் இவரது சொத்துக்கள் சில அரசுடமை செய்யப்பட்டன.அவற்றின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சசிகலாவிற்கு அடுத்தடுத்து கோட்பாடுகள் தமிழக அரசு மூலம் வந்தடைந்தது.

இவை அனைத்தும் சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் செய்யபட்டதாக கருதினர்.இந்நிலையில் சசிகலா முன்தினம் இரவு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியது நான் அமமுக கட்சியிலிருந்து விலகுகிறேன்.நான் இனி அம்மா ஜெ.ஜெயலிதாவின் ஆட்சி வெற்றி பெறுவதற்காக கடவுளிடம் பிராத்திப்பேன்.இதைத்தொடர்ந்து தொண்டர்கள் ஜெயலலிதா அம்மாவின்  கட்சிக்காக உண்மையுடன் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.திமுக ஆட்சிக்கு வருவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த அயராது உழைப்பேன் என்றார்.

இவரது இந்த திடீர் அறிவிப்பானது தொண்டர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமாறு சசிகலா தரப்பில் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களில் வெற்றிவேல் காலமாகிவிட்டார்.தங்கம் தமிழ்செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவில் சேர்ந்துவிட்டனர்.

இதனையடுத்து சாத்தூர் சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவிற்கே சென்று சேர்ந்துவிட்டார்.மீதமுள்ள 14 பேரில் குறைந்தபட்சமாக 10 பேருக்காவது அதிமுகவினர் சீட் வழங்குமாறு சசிகலாவின் தரப்பிலிருந்து கேட்டுவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.