முதல்வரின் உடல்நிலை பற்றி வெளிவந்த முக்கிய தகவல்! பரபரப்பாக காணப்படும் கட்சி தலைமை!
திடீரென்று 19 ஆம் தேதி அன்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டப்பட்டது. அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்னுகு லேசாக காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவமனையில் சென்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தினேர்.
அதனால் அவர் இரண்டு நாட்களுக்கு முடிவு செய்திருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என அறிவிப்பு வெளியானது . மேலும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, நேற்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (21-6-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செயப்பட்டது. இதுபற்றிய முறையான அறிவிப்பு அரசின் செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது.
அத்துடன், (19-6-2022) திரு. வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லை, என்னுடைய உரையினை நமது கழகப் பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாடினார்.
என்னுடைய உடல் நலம் கருதி பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி முறைப்படி மருந்துகளும், கொஞ்சம் ஓய்வும் எடுத்தால் போதும்.
நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல எனது பணியினைத் தொடங்க செய்வேன் என்றும் நான் நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன். என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.