ADMK DMDK: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அச்சமயத்தில் இவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடாவிட்டாலும் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர்.
இது ரீதியாக எடப்பாடி-யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் எம்.பி சீட் தருவதாக கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார். எடப்பாடி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் என்று கூறி வந்தனர். ஆனால் இதனை அதிமுக மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை. பிரேமலதா விடம் பேசி சமாதானம் செய்து வைத்திருந்தனர். நாளடைவில் தேமுதிக பொருளாளர் எம் கே சுத்தீஷும், ராஜ்ய சபா சீட் வழங்குவதாக அதிமுக கூறியது உண்மை, நேரம் வரும்போது இது ரீதியாக பேசுவேன் என கூறினார்.
இப்படி தேமுதிக, அதிமுக மீது அதிருப்தி நிலையில் உள்ளது நேரடியாகவே தெரிவித்து வந்தது. தேமுதிக பொருளாளர் இவ்வாறு கூறியது குறித்து மீண்டும் எடப்பாடி இடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர், ஆனால் அவர் சரியான பதிலளிக்காமல் மலுப்பியுள்ளார். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கி தற்போது தான் பாஜகவுடன் இணைந்துள்ளோம்.
மேற்கொண்டு மாற்று கட்சியினரும் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளார்கள். இனி வரும் நாட்களில் தான் எம்பி சீட் தேமுதிகவிற்கு வழங்குவது குறித்து தெளிவாக ஊடகத்திற்கு தெரிவிப்போம் என கூறினார். தேமுதிக நேரடியாக எம் பி சீட் வழங்குவது குறித்து பேசி உள்ள போது தற்போது எடப்பாடி மறுக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிக்குள் அதிருப்தி நிலை உண்டாகியுள்ளது.