ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!?
2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி அவர்கள் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து அவரே முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எம்.எஸ் தோனி அவர்கள் இருக்கின்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத்தந்த ஒரே கேப்டன் எம்.எஸ் தோனி அவர்கள் ஆவார். 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்பு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தலைவி அடைந்தது.
அதன் பிறகு இந்திய அணிக்காக இன்னொரு உலகக் கோப்பையை தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்தது. சரி பினால் புகட்டும் எப்படியும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் மனதை தேர்த்திக் கொண்டனர்.
ஐபிஎல் தொடர்பு 2008ம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சேப்பாக்கத்தில் அணிக்காக கேப்டனாக விளையாடி வரும் எம்.எஸ் தோனி அவர்கள் 5 முறை ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்தஸமூன்று சீசன்களாகவே இவருடைய ஓய்வு முடிவை எதிர் நோக்கி சிலர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு எம்.எஸ். தோனி அவர்கள் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் “ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பிற்காகவே இன்னொரு சீசன் விளையாடுவதற்கு நான் முயற்சி செய்வேன்” என்று எம்.எஸ் தோனி அவர்கள் கூறி இருந்தார். மேலும் விளையாடுவதற்கு உடற்தகுதி முக்கியம். ஓய்வு முடிவை அறிவிக்க இன்னும் 6 மாத காலம் உள்ளது. எனவே அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று கூறியிருந்த நிலையில் அந்த 6 மாத கால அவகாசம் முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்பதால் எம்.எஸ் தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் தெரிய வரும்.
எம்.எஸ் தோனி அவர்கள் கடந்த ஜூன் மாதம் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் எம்.எஸ் தோனி அவர்கள் பூரண குணமடைந்து விட்டாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு பெங்களூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ் தோனி அவர்கள் பதில் அளித்துள்ளார்.
அதாவது தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எஸ் தோனி அவர்களிடம் உடல்நலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த எம்.எஸ் தோனி அவர்கள் “முழங்காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு அந்த காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டேன். ஆனால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. என்னை பரிசோதித்த மருத்துவர்கள் நான் நவம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்று கூறினார்கள். என்னுடைய தினசரி வாழ்க்கையிலும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை” என்று கூறியுள்ளார்.