Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!

0
45
#image_title

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!

நவீன காலத்தில் உலகம் உள்ளங்கையில் அடங்கி விட்டது. உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை ஓர் இடத்தில் இருந்து கொண்டு பார்க்கும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. சோசியல் மீடியா செயலிகளான மெட்டா, எக்ஸ், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நாம் நிறைய தகவல்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் நாட்டு நடப்பு, உலகில் நடக்கும் நிகழ்வு பற்றி எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் நம்மில் பெரும்பாலனோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் மாடல்களில் இனி பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதற்கு காரணம் பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் பாதுகாப்பு வசதிகள், புதிய வசதிகளை மேம்படுத்த இயலாது என்பது தான்.

இனி இந்த வகை மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது:-

சாம்சங் கேலக்ஸி 2, நெக்சஸ் 7, ஹெச்டிசி ஒன், LG Optimus G Pro, சோனி எக்ஸ்பீரியா இசட், சாம்சங் கேலக்ஸி நெக்சஸ், சாம்சங் கேலக்ஸி S2, சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10, சாம்சங் கேலக்ஸி எஸ்.

இந்த வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் என்பது புதிதான விஷயம் அல்ல. வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கையை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. மேல குறிப்பிட்டுள்ள வகை ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் நபர்களுக்கு வாட்ஸ்அப் செயலி பயன்பாடு தேவைப்பட்டால் புது மொபைல் வாங்கிதான் ஆக வேண்டும். காரணம் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து பயன்படுத்துவதை அந்நிறுவனம் கட்டாயமாக்கி உள்ளது. இந்த அப்டேட் வசதி பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இல்லை என்பதினால் வேறு வழியின்றி அந்த வகை மொபைல்களுக்கான வாட்ஸ்அப் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருப்பது பயனாளர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.