ஐபிஎல் தொடரில் எம்.எஸ் தோனி அவர்களை சிஏஸ்கே அணியில் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பிசிசிஐ நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தது. அந்த கோரிக்கையை பிசிசிஐ நிறைவேற்றியதா இல்லையா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது வழக்கம். அதே போல ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்கும். அதே போல 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஏல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் வழக்கமாக ஒவ்வொரு அணியும் நான்கு முக்கியமான வீரர்களை தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவித்து விடுவித்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது தற்பொழுது 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் விதிமுறை இருக்கின்றது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரானா, ஷிவம் தூபே ஆகிய நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அணியின் தூணாக இருக்கும் எம்.எஸ் தோனியை தக்க வைக்க முடியாது. அதனால் சிஏஸ்கே அணி பிசிசிஐ நிர்வாகத்திடம் 5 அல்லது 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
இதையடுத்து பிசிசிஐ அந்த கோரிக்கையை பரிசீலனை செய்தது. தற்பொழுது பிசிசிஐ நிர்வாகம் அடுத்து நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்ற அணிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதற்கு காரணமும் எம்.எஸ் தோனி அவர்கள்தான் என்று கூறப்படுகின்றது. அதாவது எம்.எஸ் தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நான்கு வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் ருத்ராஜ், ஷிவம் தூபே, பதிரானா, ஜடேஜா ஆகியோர் தக்க வைத்து தன்னை விடுவித்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 5 வீரர்களை தக்க வைப்பதாக இருந்தால் தன்னை தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளாராம்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்காக பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து பிசிசிஐ நிர்வாகமும் தோனிக்காக காலம் காலமாக இருந்த விதிமுறையை மாற்றியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு எம்.எஸ் தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.