வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்! ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்தியா? 

Photo of author

By Vijay

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்! ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்தியா?

 

இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும்  2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.

3 ஒருநாள் போட்டிகளில் முதலாவது போட்டி மிர்பூரில் நடந்தது. இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டி இன்று புதன்கிழமை நடக்கிறது. முதலாவது போட்டியில் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு இந்திய வீரர்கள் தங்களது ஆட்ட முறையை மாற்றி கொள்ளாததால் தோல்வியை தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இன்று நடக்கும் இரண்டாவது தொடரில் தோல்வியுற்றால் தொடரை வெல்லும் வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உள்ளதால் கட்டாயம்  வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

வங்காளதேசம் ஏற்கனவே முதலாவது போட்டியில் வெற்றிப்பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. எனவே இன்று நடக்கும் போட்டியில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏற்கனவே வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்கி உள்ளனர்.

இந்த தொடரில் வங்காளதேசம் வெற்றிப்பெற்றால் 3-2 என்ற முன்னிலையில் தொடரை வெல்லும். இந்திய அணி வென்றால் மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிக்கு வெற்றி வாய்ப்பு செல்லும். இந்திய-வங்காளதேச அணிகள் இதுவரை 37 ஒரு நாள் போட்டிகளில் நேருக்குநேர் களம் இறங்கி உள்ளன. இதில்  30 போட்டிகளில் இந்திய அணியும் 6 போட்டிகளில் வங்காளதேச அணியும் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது.

வங்காளதேசம் இந்திய அணிக்கு எதிராக 2015–ம் ஆண்டு தொடரை வென்றுள்ளது. எனவே மீண்டும் தொடரை வெல்லும் முனைப்புடன் வங்காளதேச அணியும்,இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணியும் உள்ளதால் இன்றைய போட்டிக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மீர்பூர் மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் வேகப் பந்து வீச்சுக்கு எதிராகவும் உள்ளதால் சுழல் பந்து வீச்சில் சிறந்து விளங்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.இன்றைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்பது தெரியும்.