கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கிரிக்கெட் பார்ப்பதற்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.அதில் மிகவும் முக்கிய போட்டியாக ரசிகர்கள் எதிர்பார்க்கப்பது தான் ஐபிஎல் மற்றும் வேர்ல்ட் கப் மேட்ச். வேர்ல்ட் கப் மேட்ச்சை விட அதிக அளவு ரசிகர்களுக்கிடையே அதிக போட்டிகள் நிகழும் மேட்ச் தான் ஐபிஎல்.இந்த போட்டியானது வரும் 9 ஆம் தேதி தொடங்கயிருக்கிறது.இந்த போட்டியில் பல மாநிலங்களை பரிந்துரை செய்யும் வகையில் பல டீம்கள் உள்ளன.

அதனையடுத்து தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகி வருகிறது.தற்போது ஹாலிவுட் நடிகை மற்றும் நடிகருமான ஆலியாபட் மற்றும் அக்ஷை குமாருக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.மற்றும் கிரிகெட்டின் ஆட்ட நாயகனான சச்சினுக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் தங்களின் வீட்டினுள்ளே தங்களை தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து டெல்லி அணி வீரர் அக்சர் படேல் மற்றும் பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி ஒருவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.

இவர்களை தவிர்த்து மும்பை ஆடுகளப் பராமரிப்பாளர் 8 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிர்ச்சியாளர் மற்றும் விக்கெட் கீப்பிங்க் ஆலோசகர் கிரண் மோருக்கும் கொரோனா தொற்றானது நேற்று உறுதிசெயப்பட்டுள்ளது.அதன்தொடர்ச்சியாக டேனியல் சாம்ஸ்க்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை மறுநாள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு முதல் போட்டியாக ஐபிஎல் தொடர் நடக்கயிருக்கிறது.இந்த இரண்டு குழுக்களிலும் கொரோனா தொற்றால் வீரர்கள் பாதித்து இருப்பதால் திட்டமிட்ட படி போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலை தொடருமானால் ஐபிஎல் நடக்குமா என்பதே சந்தேகத்திற்கு உள்ளானது தான் என அனைவரும் பேசி வருகின்றனர்.முதல் ஆட்டமே நடப்பதில் சிக்கல் உள்ளதால் அவ்வணியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.