தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

0
128

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸை தடுக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் பல்வேறு நிலைகளில் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் ஆகியவை முடக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் மாநில அரசு உத்தரவிட்டு வருகிறது‌.

அந்த வகையில் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதால் செப்டம்பர் வரை மாணவர்களின் சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்வதற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையானது அதிகமாக வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் சேர்க்கை அதிகம் நடைபெறுவதாலும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Previous articleமீண்டும் பார்த்திபன்-கார்த்திக் கூட்டணி!! அடுத்த மெஹா ஹிட் படம் ரெடி!!
Next articleசோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!