சமையல்காரர் முதல் பராமரிப்பாளர் சாந்தனு வரை அனைவருக்கும் சொத்தில் பங்கு. ரத்தன் டாடாவின் உணர்ச்சிமிக்க உயில். ரத்தன் டாடா தனது உயிலில் பல ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்தவர்களை குறிப்பிட்டுள்ளார். உள்ளபடியே இதற்கு தனி மனது வேண்டும். டாடா-விற்கு சமையல்காரராக பணியாற்றிய ராஜன் ஷா என்பவரின் பெயர் உயிலில் இருக்கிறது.
ரத்தன் டாடா வளர்த்த டிடோ என்ற நாயை, ராஜன் ஷா-வே பராமரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என தனியாக பணம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவிடம் பட்லராக பணியாற்றிய சுப்பையா என்பவருக்கும் குறிப்பிட்ட நிதியை வழங்க வேண்டுமென உயிலில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் தனது உயிலில், தனது நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடுவின் பெயரையும் குறிப்பிட்டு, அவருக்கு தனது நிறுவனத்தில் ஒரு பங்கு வழங்க வேண்டுமெனவும், அவரது வெளிநாட்டு கல்வி செலவுகளை ஏற்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த நாட்டில் படிக்க ஆசைப்படுகிறாரோ அந்த நாட்டில் அவரது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்க வேண்டும் என உயிலில் எழுதியுள்ளார்.
ரத்தன் டாடா மறைந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இந்த மாதிரி ஒரு தொழிலதிபர் பழக்கம் நமக்கு கிடைக்க வேண்டும் என நினைக்காமல் இந்த மாதிரி ஒரு தொழிலதிபராக நாம் வர வேண்டும் என உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.