இந்த வேடத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு தைரியம் இருக்கா? அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய இயக்குனர்!

இந்த வேடத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு தைரியம் இருக்கா? அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய இயக்குனர்!

இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்களை சுருக்கமாக ஆர்ஜிவி என்றும் அழைப்பர். இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் தயாரிப்பாளர் ஆவார். இவரது பங்களிப்பு அதிகம் அளவு இந்தி தெலுங்கு போன்ற திரைப்படத் துறைகளில் உள்ளது. இவர் அதிக அளவு கற்பனை திரைப்படங்கள் அரசியல் ரீதியான திரைப்படங்கள் போன்றவற்றை எடுப்பது வழக்கம். இவர் முதன்முதலில் நாகர்ஜுனா வைத்து சிவா என்ற திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றியை அளித்தது.

மேலும் இப்படம் இந்தி மற்றும் தமிழில் உதயம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதேபோல இவருக்கு இந்தியில் ரங்கீலா சத்யா ஆகிய திரைப்படங்கள் பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது. தற்பொழுது அல்லு அர்ஜுன் பகத் பாசில் இணைந்து நடித்துள்ள புஷ்ப என்ற திரைப்படம் வர உள்ளது.இப்படம் செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தின் டிரெய்லர் ஆனது நேற்று வெளியானது. வெளியாகிய இரண்டு மணி நேரங்களிலேயே 2 கோடி பார்வையாளர்களை பார்க்கும் அளவிற்கு வைரலானது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் வில்லனாக பகத் பாசில் நடித்துள்ளார்.மேலும் ஸ்ரீதேவி பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். படமானது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ராம்கோபால் வர்மா இப்படத்தின் டிரைலரை பார்த்து அவரது ட்விட்டர் பக்கத்தில் காரசாரமான கேள்விகளை கேட்டுள்ளார். அதில் அல்லு அர்ஜுன் என்ற ஒரே சூப்பர் ஸ்டார் தான் இதுபோன்ற யதார்த்தமான வேடங்களில் நடித்தவர்.

பவன் கல்யாண் மகேஷ்பாபு சிரஞ்சீவி ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு இது போன்ற வேடங்கள் ஏற்று நடிக்க தைரியம் இருக்கிறதா என்று அவர்களை பேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பெட்டர் போஸ்ட் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தொடர் போஸ்டில் ரஜினிகாந்த் பெயர் உள்ளதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.

Leave a Comment