இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கிய யஷ்ஷவி ஜெய்ஷ்வால் 13(63), ரோஹித் ஷர்மா 2(16) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஐந்து வீரர்களும் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார்கள்.
இவ்வாறு இருந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்த ரிஷப் பண்ட் தனி ஆளாக களத்தில் போராடினார். ஆனால் அவரும் எதிரணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் அதிகபட்ச்சமாக 49 பந்துகளில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அவுட் ஆகி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்திய அணி.
ரிஷப் பண்ட் கடைசியாக கார் விபத்தில் சிக்கி வலது காலில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். தற்போது மீண்டும் பழைய பார்முக்கு வந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மேலும் நேற்று இந்தியா -நியூசிலாந்து இடையிலான போட்டியில் விளையாடினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார் நியூசிலாந்து வீரர் லதம் பேட்டிங் செய்யும் போது ஜடேஜா பந்து வீசினார். அந்த பந்து தவறி ரிஷப் பண்ட் வலது காலில் பட்டது. ஏற்கனவே விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது அதே காலில் மீண்டும் அடி பட்டதும் அவர் வலி தாங்காமல் கீழே விழுந்தார். பிறகு பெவிலியன் திரும்பினார் அவருக்கு பதிலாக துர்வ் ஜூரல் கீப்பிங் செய்தார்.
இது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே அடிப்பட்ட இடத்தில் காயம் பட்டதால் அவரால் களத்தில் சிகிச்சை அளிக்க கூட நிறக் முடியவில்லை அங்கிருந்து நடக்க முடியாமல் வெளியேறினர். அவரின் காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவரின் உடல் தகுதி பொறுத்து அவர் இரண்டாவது இன்னிங்க்ஸ் இல் இடம்பெறுவாரா? மாட்டாரா? என்பது அறிவிக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.