சஞ்சீவ் சன் டிவிக்கு போறாரா!! இனிமே விஜய் டிவில இவருக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்களா??

Photo of author

By CineDesk

சஞ்சீவ் சன் டிவிக்கு போறாரா!! இனிமே விஜய் டிவில இவருக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்களா??

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ராஜா ராணி. பணக்கார வீட்டு பையன் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை மையமாகக் கொண்டு இந்த நாடகம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நாடகத்தின் கதாநாயகன் சஞ்சீவ் மற்றும் கதாநாயகி ஆலியா. இருவருமே ராஜா ராணி சீரியல் ஆரம்பிக்கும் சமயத்தில் அவர்களுக்கு அது தான் தொலைக்காட்சிக்கு முதல் முறை. மேலும் தொலைக்காட்சி எதிர்பாராதவிதமாக ராஜா ராணி சீரியல் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு மக்கள் விரும்பினர்.

மேலும் அந்த சீரியல் ஒளிபரப்பான சமயத்தில் விஜய் டிவியின் டிஆர்பியை உயர்ந்தது. இருவரின் ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருந்ததால் மக்கள் இவர்களை பற்றி பேச ஆரம்பித்தனர். மேலும் சஞ்சீவ் மற்றும் அறியா இருவருமே அந்த சீரியல் மூலம் அறிமுகமாகி இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க ஆரம்பித்தனர். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதலுக்கு சாட்சியாக அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் அய்லா. மேலும் இருவருமே யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் சமீபகாலமாக அன்றாட வாழ்வில் அவர்கள் செய்யும் வேலைகளை பதிவிட்டு வருகிறார்கள். இவர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இது போன்ற ஒரு அழகிய குடும்பம் நமக்கு அமைய வேண்டும் என்று பொறாமை படும் அளவில் அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் அன்பாகவும் அழகாகவும் இருக்கிறது.

மேலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு சஞ்சீவ் காற்றின் மொழி என்ற என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தார். மேலும் அந்த சீரியலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்து விட்டது. தற்போது ராஜா ராணி சீசன் 2 என்ற சீரியலில்  ஆலியா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தற்போது எந்த ஒரு கமிட்மென்ட்ம் இல்லாத சஞ்ஜீவ்க்கு  சன் தொலைக்காட்சியில் ஒரு ஆஃபர் கிடைத்துள்ளது. அது சன் டிவியில் தற்போது புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்ப உள்ளது. அந்த சீரியலில் சஞ்சீவ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த படத்தின் பூஜை அண்மையில் தான் நடந்ததாகவும் பேசப்படுகிறது. இந்த சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலின் பெரிய கயல் என்று வைத்துள்ளார்களாம். அதில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் அது எதைப் பற்றிய கதை மேலும் சீரியல் எத்தனை மணிக்கு ஒளிபரப்பப்படும் என்ற எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு நடிக்க செல்லும் சஞ்சீவ்வை சன் டிவி ரசிகர்களும் வரவேற்க தயாராக உள்ளார்களாம்.