வெளுத்து வாங்கும் கனமழை தப்பிக்குமா தமிழகம்!!

Photo of author

By Vinoth

தமிழகத்தில் இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் இந்த 8  மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிகமாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதால் இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வருகிற 30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையே கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை  ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாகை,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்துள்ளது இதனால் அங்கு ஆயிரக்கணக்கான  ஏக்கரில்  நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாய் போனது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்