தமிழ்நாட்டில் நாட்கள் செல்ல செல்ல வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது கடந்த மார்ச் மாதம் வரையில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்சமயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாகவே தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை தற்சமயம் விதித்திருக்கிறது அதோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு முறை மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் அதோடு எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சற்று முன் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவ காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆலோசனை கூட்டத்தில் முகக்கவசம் தனிமனித இடைவெளியில் மா நிலத்தில் இருக்கக்கூடிய மக்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதோடு இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொதுமக்களை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வலியுறுத்துவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.