அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? பிரதமரின் பதில் என்ன?

Photo of author

By Parthipan K

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கூறியுள்ளார். இக்கலகத்தை நடப்பு நிதியாண்டிலேயே நிறுவ கோரியும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு சித்தா, யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி மற்றும் உனானி போன்ற மருத்துவ துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது என்றும் சித்த மருத்துவ கழகத்தை தமிழ்நாட்டில் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து என அனைத்து வழிகளிலும் மக்கள் பயன்பெறும் வகையில் சென்னைக்கு அருகில் இடம் ஒதுக்கி உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சித்தா போன்ற மருத்துவத்துறை தொடங்கிய தமிழகத்தில் இந்த சித்த மருத்துவ கழகம் தொடங்கினால் அது தமிழகத்திற்கு மேலும் சிறப்பானதாக அமையும் என்பதனையும் இதுதொடர்பாக மத்திய அரசு கூறும் அனைத்து கேள்விகளுக்கும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்க கோரி கட்டளையிடப்பட்டுள்ளது என்பதனையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசின் பதிலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு சாதகமான பதிலை அளிக்கும் என்று நம்புவதாகவும், தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் கட்டப்படும் என்பதை உறுதியாக நம்புவதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.