தற்பொழுது பலரும் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கமே உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணமாகும்.காலத்திற்கு ஏற்ப உணவுப் பழக்கங்கள் மாறி வரும் வேளையில் கூடவே நோய் பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது.
உடல் எடை அதிகரிப்பு நம் அழகை பாதிப்பதை தாண்டி பல்வேறு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடுகிறது.பல மோசமான உணவுகளை உட்கொண்டு உடல் எடை கூடிய பிறகு வருத்தப்பட்டு பயன் இல்லை.ஆரம்ப காலத்திலேயே நாம் ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றி வர வேண்டும்.
உடல் எடையை குறைக்க கடிமான உடற்பயிற்சி செய்தாலும் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் தான் நோய் பாதிப்பின்றி வாழ முடியும்.சிலர் சீக்கிரம் உடல் எடையை குறைக்க ஆபத்தான டயட் முறைகளை பின்பற்றுகின்றனர்.இதனால் அவை உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.
சர்க்கரை,கொழுப்பு குறைவாக உள்ள உணவை உட்கொண்டாலே உடலில் கொழுப்பு தேங்குவது கட்டுப்படும்.உடல் கொழுப்பை கரைக்க நாம் சில மூலிகை பானங்களை பருகி வரலாம்.டீ,காபியை தவிர்த்துவிட்டு மூலிகை பானங்களை பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் கொழுப்பை கரைக்க தினமும் ஒரு கிளாஸ் சுக்கு பானம் பருகலாம்.காய்ந்த இஞ்சி என்று அழைக்கப்படும் சுக்கு மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும்.இந்த சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கால் தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து குறைவான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
தலைவலி வந்தால் சுக்கை தண்ணீரில் நினைத்து தரையில் வைத்து தேய்த்து அந்த பேஸ்டை நெற்றி மீது பூசினால் பலன் கிடைக்கும்.சுக்கை பொடித்து கஞ்சில் கலந்து தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.தொண்டை கரகரப்பு,நெஞ்சு சளி பிரச்சனை இருப்பவர்கள் சுக்கு தேநீர் செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.