ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும் தகவல் !!
சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சில தயாரிப்புகள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் நுழைய அடித்தளம் அமைத்து வருகிறது. அமுல் நிறுவனம் குஜராத் அரசின் பொதுநிறுவனம் ஆகும். தமிழக விவசாயிடம் இருந்து பால் வாங்க முடிவு செய்து உள்ளது . அவர்களிடம் இருந்து பாலை அதிக விலைக்கு வாங்கி அமுல் நிறுவனத்தின் தரத்தை உயர்த்த பல செயல்களை செய்த வருகிறது.
இந்நிலையில் அமுல் வந்தால் முறையாக பால் அனைத்து இடங்களுக்கு கிடைக்காது என இணையத்தில் செய்தி பரவி வருகிறது . ஏற்கனவே ஆவின் நிறுவனத்தின் பால் தமிழ்நாட்டில் சில பகுதிகளுக்கு முறையாக கிடைப்பதில்லை என பல செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்திகளில் உண்மை இல்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் உறுதியாக கூறியுள்ளார்.மேலும் அவர் ஆவின் பால் உற்பத்தியானது நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை என்றும் இனி ஆவின் பாலுக்கு தட்டுபாடு ஏற்படாது என விளக்கமளித்துள்ளார் .
அதேபோல தமிழகத்தில் அனைத்து இடங்களுக்கும் பால் சரியான முறையில் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதிளித்துள்ளார் . தற்போது தமிழத்தில் பால் கொள்முதல் குறைந்து இருப்பதற்க்கு காரணம் ஆவின் நிறுவனத்தில் பால் பதபடுத்தும் நிலையத்தில் குறைந்த எண்ணிகையில் பணியாளர்கள் உள்ளதுதான் காரணம் என விளக்கம் தந்துள்ளார்.