தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்??
நெல்லை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் சிஐடியு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அரசு வெறும் 25 ரூபாய் மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே வலியுறுத்தியபடி 600 ரூபாய்க்கு மேல் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பு வருகின்றனர்.
இதுகுறித்து தொழிற்சாலை பொருளாளர் செல்லத்துரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தொழிலாளர்களுக்கு தினந்தோறும் கூலி மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டு 2021-2022 ஆம் ஆண்டுக்கு தினசரி சம்பளமாக 23 ரூபாய் உயர்த்தப்பட்டு பட்ஜெட் வெளியிடப்பட்டது. அந்நிலையில் தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக 637 ரூபாய் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரையை ஏற்காமல் தற்போது 25 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியுள்ளனர் தொழிலாளர்கள். இன்றைய நிலையில் 436 ரூபாய் மட்டுமே ஊதியம் தருவதாகவும் இதனால் தூய்மை பணியாளர்கள் எதையும் வாங்க முடியாமல் தங்கள் குழந்தைகளின் பள்ளி செலவுக்கு சரியா போகிறது எனவும் கூறுகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்கள் பெரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
எனவே குறைந்தபட்சம் கூலியாக 600 ரூபாய்க்கு மேல் வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் ஈடுபட்டுள்ளோம் என்றார். இனியும் தினக்கூலி உயர்த்தாமல் தாமதித்தால் வரும் பத்தாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.