மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு!
மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பானது மக்கள் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் உரிமையை வங்கிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டினார்கள். வாழ்வாதாரத்தை மீட்க போராடும் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது கடனுதவி, வங்கி ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தான். இந்த உண்ணாவிரதினால் மத்திய அரசின் கவனம் மாற்றுத்திறனாளிகளின் மீது திரும்பியது.
சட்ட திட்டத்தின் அடிப்படையில் பார்த்தாலும் மனிதாபிமான அடிப்படையில் பார்த்தாலும் மாற்றுத்திறனாளிகளின் இந்த கோரிக்கையானது நியாயம் தான். இத்தனை ஆண்டுகள் இந்த உரிமைகளை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது சமூக அநீதியாகும் என்று மக்கள் நீதிமன்ற மய்யம் தலைவர் கூறினார். அனைத்து வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்சாய்தளம் அமைக்க வேண்டும் என கூறினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு வங்கிகளின் கண்காணிப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் ,குரல்வழி வங்கி சேவை, வங்கிகளில் ஆவணங்கள் வசதி, வங்கியில் வாடிக்கையாளர் சேவை, இயந்திரங்களில் தொட்டுணரும் பொத்தான் வசதி என அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.