தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ,ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வானது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கான அட்டவணை விரைவாக வெளியாக உள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை மற்றும் பள்ளி திறப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுமுறை தள்ளிப்போனது.இதனை சரி செய்யும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பாட வகுப்புகள் சரியாக நடைபெறும் குறித்த நேரத்தில் பாடத்திட்டம் நிறைவு செய்ய முடியும் என எதிர் பார்த்தனர்.இந்நிலையில் திருப்பமாக ஆசிரியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையின் காரணமாக அந்த சனிக்கிழமைகளில் நடைபெறும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் குறித்த நேரத்தில் பாடதிட்டத்தினை நிறைவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் குழம்பியுள்ளன அதனை தொடர்ந்து மாணவர்களும் எப்படி தேர்வினை எதிர்கொள்வது என குழம்பியுள்ளன.
இதனை தொடர்ந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 14-ம் தேதி 10,11,12 வகுப்புகிற்கான தேர்வு அட்டவனையை வெளியிட உள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் ஆலோசனையின் பிறகு அவர் அட்டவணையை வெளியிடுவார் என கூறப்படுகிறது.