பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!

0
234
#image_title

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்! 

தமிழ்நாடு முழுவதும் பனியின் தாக்கம் எப்போது குறையும் என்று வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் கடும் பனி வாட்டி வருகிறது. சாதாரண மாவட்டங்களில் கூட ஊட்டி கொடைக்கானல் போல பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. வாகனங்களில் செல்வோர் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களில் பனியின் தாக்கம் குறைய கூடும் என்று வானிலை மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

பொதுவாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களை குளிர்கால மாதங்கள் என்போம். இந்த மாதங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படும். பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும்.

பகல் நேரங்களில் காணப்படும் வெப்பத்தின் காரணமாக நீர்நிலைகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் நீர் ஆவி ஆகி மேலே செல்கிறது.

இதுவே இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்று இல்லாத காரணத்தினால் இந்த நீர் துளிகள் காற்றில் உள்ள தூசுக்களில் படிந்து நமக்கு இந்த பனித்துளி போல் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இது ஒரு சில பகுதிகளில் நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.

தற்போது வெப்பநிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது. உயர்ந்து வரும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் பனிப்பொழிவின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

Previous articleஇந்த பல்கலைக்கழகத்தின் இறுதி பருவத் தேர்வில் திடீர் மாற்றம்! நாளை எக்ஸாம் இல்லை!
Next articleவரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!