3-வது முறையாக மலருமா தாமரை?? ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!!
அரியானா மற்றும் ஜம்மு கஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் ஹரியானாவில் பாஜக கட்சியும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அரியானா மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 67. 90% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8-மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் 3-அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஏற்கனவே அரியானாவில் பாஜக கட்சி இரண்டு முறை ஆட்சியில் நீடித்து வந்த நிலையில் ஹாடரிக் வெற்றி பெற்று 3-வதாக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில் தற்போது 50 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. இங்கு ஹிஷார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸை சுயேச்சை வேட்பாளர் சாவித்திரி ஜிண்டால் 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பாஜக 49 தொகுதிகளில் முன்னிலையிலும் ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றுள்ளதால் அங்கு மூன்றாவது முறையாக தாமரை மலர்ந்து ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமீன் பட்டேல் அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கையில் நிலைமை மாறி காங்கிரஸ் மெஜாரிட்டி தாண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்த நிலையில் பாஜக தோல்வியை தழுவும் என்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பீடத்தில் அமரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நடைபெற்று வரும் சூழலில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி முடிவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர், மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அங்கேயும் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி முதல் வெற்றியைப் பெற்று கணக்கை தொடங்கியதை அடுத்து அங்கு உமர் அப்துல்லா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அவரின் தந்தையும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அங்கு தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்படும் நிலையில் தொங்கு சட்டசபை அமையுமா?? எனவும் கருத்துகள் நிலவி வருகின்றன. பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் மாநாட்டு கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கி உள்ள நிலையில் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நேரடி எதிரியாக காங்கிரஸ் உள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்ற வேண்டிய சூழலில் பாஜக உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் பாஜக ஜம்மு காஷ்மீரில் பின் தங்கியது. அங்கு இந்த முறையும் காங்கிரஸே ஆட்சி அமைக்கும் என தற்போதைய தேர்வு முடிவு நிலவரங்கள் தெரிவிக்கின்றன.