கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது.
ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது. ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், பள்ளிகளின் திறப்பு தள்ளி போகுமா? அல்லது அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா? என பலவித குழப்பங்கள் இருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், ஏற்கனவே அறிவித்தபடி 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.