ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா?
பியூஷ் கோயல்!
அண்மைக்காலமாக,ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எதிர்கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கு ஏற்றார் போல் ஒரு சில நிறுவனங்கள் ரயில்வே துறையில் உள்ள ஒருசில பணிகளின் ஒப்பந்தங்களை எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து லோக்சபாவில் எழுதப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.அவர் கூறியதாவது,ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உறுதிபடக் கூறிய அவர், வருகின்ற 2030ஆம் ஆண்டு வரை ரயில்வே துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவது மேம்படுத்துவது மற்றும் நவீனப்படுத்துவது போன்ற திட்டங்களுக்கு சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகின்றது.தற்போது நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவரும் நிலையில்,தற்போது ரயில்வே துறைக்கான இந்த நிதி பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையிலும்,பயணிகளுக்கு தரமான ரயில் சேவையை தடையின்றி வழங்கும் வகையிலும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் பப்ளிக் மற்றும் பிரைவேட் பார்ட்னர்ஷிப் திட்டத்தை,மேற்கொண்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பியூஷ் கோயில் கூறினார்.மேலும் மேலே கூறிய தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்,குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் நவீன சிறப்பம்சங்கள் உள்ள ரயில்களை இயக்குவது மட்டும் இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.