ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா ஏற்பட்டதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது மத்திய மாநில அரசு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி நடத்திவருகின்றனர் . இதனால் தற்போது திரைத்துறை பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , திரையரங்குகள் திறக்கப்படாத நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இதுகுறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியும், பல்வேறு மாநிலங்களில் நிலைகளைப் பொருத்தே திரையரங்கங்கள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் இப்போதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தமிழக முதல்வர் நேற்று சென்னை வந்த நிலையில், முதற்கட்டமாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கௌரவ தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்  உள்ளிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் ஆயுதபூஜைக்கு திரையரங்கம் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை முதல்வரிடம் வைத்தனர்.

மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்கம் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், திரையரங்குகளில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்பதற்கு பதிலாக கூடுதலாக திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தியேட்டர்களை புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.

இந்நிலையில் திரையரங்குகள் திறப்பது தொடர்பாக முடிவுகளை வரும் 28-ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஆயுத பூஜை விடுமுறையில் திரையரங்கள் திறக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்கம் திறக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment