மீண்டும் திரையரங்குகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையில் அதிகப்படியான இந்திய மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யக்கூட இடமில்லாமல் தவித்து வந்தனர்.அந்த சூலில் மக்கள் பூங்காக்களையும்,காலி இடங்களையும் தகனம் செய்ய பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வாறு நடந்து கொண்டிருந்த சூழலில் மக்கள் பலர் வெளியே செல்ல அச்சமுற்று இருந்தனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்க பல திட்டங்களை புகுத்தினர்.அந்தவகையில் மால்கள்,திரையரங்குகள்,பேருந்துகள் போன்றவை தற்காலிகமா செயல்படுத்துவதை நிறுத்தினர்.இந்த திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக சிறு பயன் கிடைத்தது.
மக்கள் தொற்றிலிருந்து சிறிதளவு மீண்டு வந்தனர்.தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் இன்றியும்,மருத்துவமனைகள் இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்பொழுது அனைத்து மாநிலங்களும் அதிலிருந்து மீண்டு வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் உள்ளது.தற்பொழுது செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மூன்றாம் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சமயத்தில் அரசாங்கம் பள்ளிகள் திறப்பது பற்றி பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அத்தோடு இன்று திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி வழங்குமாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தற்பொழுது மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அவர்களது மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடி வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்ப்பு சக்தி குறைந்த மாவட்டமாக கோயம்புத்தூர்,ஈரோடு,திருப்பூர் போன்றவை உள்ளது எனவும் கூறுகின்றனர்.தற்போது இந்த மாவட்டங்களில் மால்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது.தற்பொழுது சேலத்தில் ஆட்சியர் கார்மேகம் மாலை 6 மணிக்கு மேலாக எந்த கடைகளும் செயல்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி சுற்றுலா தளமான ஏற்காடு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனை அல்லது கரோனோ தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.அத்தோடு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்ல தடை விதித்துள்ளார்.இவ்வாறு பலக்கட்டுப்பாடுகள் உள்ள சூலில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாகவே காணப்படும்.மேலும் இந்த கோரிக்கை கூட்டத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் எந்த வகையான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றியும் ஆலோசனை நடத்தினர்.