ஆறுதல் வெற்றி கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!!
சட்டோக்ராமில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. 2 ஒருநாள் போட்டி வங்காளதேசத்தின் மிர்பூரில் நடந்தது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் மிர்பூரில் நடந்த 2- வது ஒருநாள் போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசமே வென்று வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து வங்காள தேசம் 3-2 என்ற நிலையில் தொடரை தன் வசமாக்கியது. இதன்மூலம் வங்க மண்ணில் இரண்டாவது முறையாக ஒருநாள் தொடரை இழந்து அதிர்ச்சியளித்தது இந்தியா.
இந்நிலையில் 3- வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று சனிக்கிழமை நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் குல்தீப் சென், மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் விலகி உள்ளனர்.அதற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக ரோகித்துக்கு பதில் இசான் கிஷானும், தீபக் சஹாருக்கு பதில் ஷபாஷ் அகமது அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கேப்டனாக லோகேஷ் ராகுல் பொறுப்பு வகிப்பார்.
இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து முன்னாள் மூத்த வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் சேவாக் இந்திய அணி கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டதாக கூறியுள்ளார். இதில் இருந்து வேகமாக மீண்டு வர வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
வங்காள அணியை பொருத்தமட்டில் அந்த அணி பேட்டிங் மற்றும் பெளலிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் வென்று வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அந்த அணி வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரை முதல் முறையாக முழுமையாக கைப்பற்ற முழு உத்வேகத்துடன் செயல்படுவர். இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெற்று வங்காளத்தின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டமானது விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.