ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
174

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா போன்ற அமைப்புகள் நீதிமன்றத்தில் வாதாடி வரும் நிலையில் இம்முறையும் அந்த வழக்கு மீண்டும் தொடர்ந்து உள்ளது.

பீட்டா அமைப்பினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுவதைக் கேட்டு நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என்று உத்தரவிட்டதை அடுத்து மாணவர்களின் மாபெரும் புரட்சி மெரினாவில் நடைபெற்றது.

இந்தப் புரட்சியை சிறிதும் கட்டுப்படுத்த முடியாமல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உத்தரவிட்டனர். ஆனால் வருடம் தோறும் இது குறித்து வழக்கு தொடர்ந்து தான் வருகிறது.

அதேபோல இந்த வருடமும் வீட்ட அமைப்பினர் வழக்கு தொடுத்த நிலையில் தற்பொழுது வரை இந்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது.அதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்று அனைவரும் மத்தியிலும் பெரும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதில், ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டது போல் கட்டாயம் நடைபெறும் எனவும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த பதினைந்தாம் தேதி பாலமேடு பகுதிகளிலும் கட்டாயம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கால்நடைத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் பலர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

தமிழர்களின் வீரமாக கருதும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒருபோதும் ஒருவராலும் தடை செய்ய முடியாது என்றும் பலர் கூறி வருகின்றனர்.

Previous articleபொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!
Next articleவிமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !