தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Rupa

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்தவண்ணம் ஆகத்தான் உள்ளது.

இதனை அனைத்தையும் சேர்த்து மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையின் போது அரசு மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனக்கோரி மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியது, சுகாதாரத் துறையில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால் அதற்கு முக்கிய பங்காற்றிய மருத்துவர்களுக்கு நாட்டிலே மிகவும் குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து மருத்துவர்கள் சிறிதுகூட ஓய்வு இல்லாமல் உழைத்து வருகிறோம். ஏன், கொரோனா தொற்று காலத்தில் சக மருத்துவர்கள் உயிர் இருந்தபோதிலும் தொடர்ந்து தங்களது பணியை செய்து வந்தோம். இவ்வாறு பல வகைகளில் தங்களது பணியை ஆற்றி வந்தாலும் முதல்வரின் பார்வை எங்கள் மீது விழுவது இல்லை. உங்களின் கோரிக்கையை அவர் ஏற்பதும் இல்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. புதிய ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழக அரசு சிறிதுகூட நிறைவேற்ற முன்வரவில்லை.

அதேபோல உயிரிழந்த மருத்துவர்களுக்கு மாநில அரசிடம் இருந்து வரவேண்டிய மானியமும் தற்போது வரை வரவில்லை. மக்களின் நலனுக்காக முதல்வர் தமிழகத்தில் சுகாதாரத் துறையை சர்வதேச தரத்திற்கு தயார் செய்ய உள்ளார். அது மிகவும் பாராட்டுதற்குரியது. அந்த வகையில் தமிழக மருத்துவர் இருந்தால் மிகவும் குறைந்த சம்பளத்திற்காக பணியாற்றி வருகின்றனர். இதனை உயர்த்த கோரி தொடர்ந்து போராடி வருவது என்பது கடினமான ஒன்று. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற செலவாக கருதுவதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது சுகாதாரத் துறை மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. அப்பொழுது அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார்.