இந்த நிலை இப்படியே தொடருமா?

Photo of author

By Sakthi

சசிகலா விவகாரம் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இருவருடைய ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டார்கள், அண்மையில் கனமழையின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகினர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததன் காரணமாக, பொது மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனியாக சென்று ஆய்வு செய்தார்கள். இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனித்தனியே நிவாரண உதவிகளையும் வழங்கி னார்கள்.

ஆகவே இருவர் பின்னாலும் கட்சியினர் செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உண்டானது, இருவரும் தனித்தனியே செல்வதை கட்சியினர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனை அடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு இருவரும் ஒன்றாக இணைந்து சென்றார்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இருவரும் ஒன்றாக இணைந்தே பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டது கட்சியினரிடையே மகிழ்ச்சியை உண்டாக்கினாலும், இது தொடருமா? என்ற சந்தேகம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே தினகரன் அதிமுகவிற்குள் எங்களுடைய ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் என்று தெரிவித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அதிமுகவிற்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, டிடிவி தினகரன் தெரிவித்த அந்த ஸ்லீப்பர் செல்ஸ் ஒருவேளை பன்னீர்செல்வம் தானோ என்ற சந்தேகம் அதிமுகவிற்கு எழுந்தது.

ஏனென்றால் ஒரு சமயத்தில் சசிகலா அதற்கு ஆதரவாக பன்னீர்செல்வம் செயல்படுவதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிற்கு அதிமுகவிற்கும் எள்ளளவும் இடமில்லை என்று தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.